அடுத்த வருடத்தில் பொதுத்தேர்தலை நடத்த நடவடிக்கை!

அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதத்திற்குள் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கிருலப்பனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தையும் அரசியலமைப்பு முரணான முறையில் செயற்பட தங்களுடைய கட்சி ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...