பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

Share The News

Post A Comment: