கல்முனையில்: கைக்குண்டுகள் மீட்புகல்முனை பிரதான நகரிலிருந்து நற்பிட்டிமுனைக்குச் செல்லும் வீதியின் பழைய மின்சார சபை குறுக்கு வீதியில் பால்மா ரின் ஒன்றுக்குள் இருந்து, நேற்று முன்தினம் (09) நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளனவென, கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பால்மா ரின்னை, பெண்ணொருவர் எடுத்துத் திறந்து போது, அதனுள் மர்மமான முறையில் கைக்குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளார்.அப்பெண் வழங்கிய தகவலையடுத்து, கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் கட்டளைக்கு அமைய பெரும் குற்றப்பிரிவுப் பதில் பொறுப்பதிகாரி எம்.எம்.அஸ்ரப் தலைமையிலான பொலிஸ் குழுவினர், ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்தலத்துக்கு வருகை தந்த விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவினர், தகர ரின்னில் இருந்து 4 கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.மீட்டெடுக்கப்பட்ட கைக்குண்டுகள், நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய, காரைதீவுக் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு செயலிழக்கச் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவத்தை அடுத்து குறித்த பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கல்முனையில்: கைக்குண்டுகள் மீட்பு கல்முனையில்: கைக்குண்டுகள் மீட்பு Reviewed by NEWS on December 12, 2018 Rating: 5