"ஜனாதிபதியின் கொலை முயற்சிக்கும், எமக்கும் தொடர்பு இல்லை" பூஜித் ஜயசுந்தர

ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பில் என்னை தொடர்புபடுத்தி பரப்பப்படும் வதந்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என குறிப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச அதிகாரியாக செயற்படும் எனக்கெதிராகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எனது கடமைகளுக்கு எதுவித இடையூறும் ஏற்படாதவிடத்து அவற்றை நான் கவனத்தில் கொள்வதில்லை எனவும் தெரிவித்தார். 

ஜனாதிபதி கொலைத் திட்டம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலருக்கு தொடர் இருப்பதாக ஊடக சந்திப்பொன்றின் போது குற்றம்சாட்டியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் கருத்தினை நிராகரித்து கருத்து தெரிவிக்கையிலேயே, பொலிஸ்மா அதிபர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். 

"ஜனாதிபதியின் கொலை முயற்சிக்கும், எமக்கும் தொடர்பு இல்லை" பூஜித் ஜயசுந்தர "ஜனாதிபதியின் கொலை முயற்சிக்கும், எமக்கும் தொடர்பு இல்லை"   பூஜித் ஜயசுந்தர Reviewed by NEWS on December 05, 2018 Rating: 5