ஜனாதிபதியால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் 4 வர்த்தமானி அறிவித்தல்களும் சட்டவிரோதமானவை என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவால் சமர்ப்பிக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேர​ணையை உறுதிப்படுத்தி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்த, ரோஹித்த போகொல்லாகம, விமல் வீரவன்ஸ, பியசிறி விஜயநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றவாளிகளைப் பரிந்துரைத்துள்ளது. ஆனால் அவர்களுக்கு எதிராக எவ்வித தண்டனைகளும் வழங்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பெரும்பாலானவர்களுக்கு அமைச்சுப் பதவிகளும் தலைவர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. வெலிக்கடையில் இருக்க வேண்டியவர்கள் தான் சபாநாயகரின் அக்கிராசனத்தை சுற்றிவளைத்து மிளகாய் தூளை வீசினர் என்றார்.

Share The News

Ceylon Muslim

Post A Comment: