தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனால், ‘138’ பஸ் வழியினூடான போக்குவரத்து  ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஆட்சிமாற்றத்தின் பின்னர், வீடமைப்பு கட்டுமானப் பணிகள் தொடர்பான அமைச்சுப் பதவி விமல்வீரவன்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்கீழேயே தேசிய வீடமைப்பு அதிகார சபை இயங்கிவருகின்றது.
இந்நிலையில், குறித்த  அதிகார சபையில் நிரந்தர நியமனம் இன்றி சேவையிலிருந்த ஊழியர்கள் சிலரை   நீக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதை கண்டிக்கும் வகையிலேயே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நீதிகோரி போராடிவருகின்றனர். அரசியலுக்காக மக்களின் வாழ்வில் பந்தாடவேண்டாம், நியமனத்தை உடன் வழங்கு என்றெல்லாம் கோஸங்கள் எழுப்பட்டன.
ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி  ஆட்சிகாலத்தில் சஜித் பிரேமதாஸவின் கீழேயே குறித்த அதிகாரசபை இருந்தது. அவரால் வழங்கப்பட்ட நியமனங்களுக்கே விமலால் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

Share The News

Ceylon Muslim

Post A Comment: