தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Dec 16, 2018

ரணிலின் காலைவாரிவிட்டு வெளியேறியோர் மீண்டும் ஐ.தே.கவுக்குள் நுழையமாட்டர் !

மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அக்கட்சிக்கு செல்லமாட்டார்கள் என பஸில் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மீகொட பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு நம்பிகை வெளியிட்டார்.

” ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியினர் அவ்வாறு செய்யமாட்டார்களென ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் அறிவித்துள்ளனர்.” என்றும் பஸில் கூறினார்.

ஐ.தே.கவிலிருந்து வெளியேறிய துனேஸ் எம்.பி., எஸ்.பி. நாவின்ன உட்பட நால்வர் மீண்டும் அக்கட்சிக்கு செல்லவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages