அமைச்சு பதவி இல்லாவிட்டாலும், நாம் ரணில் அரசுக்கே ஆதரவு - ஹக்கீம்

அமைச்சு பதவி கிடைக்காவிட்டாலும் ரணில் தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அமைச்சு பதவியை எதிர்ப்பார்த்து நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. அமைச்சு பதவி கிடைக்காவிட்டாலும் ரணில் தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவோம்.எவ்வாறாயினும், அமைச்சுப் பதவிகள் கேட்டு அரசாங்கத்திடம் எந்தவித கோரிக்கைகளையும் நாங்கள் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான  ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திக்கு : 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...