”மைதிரிக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்” இனவாத அமைப்பு ராவலய

நாட்டின் எதிர்காலத்துக்காக எடுத்த தீர்மானத்தை எதற்காகவும் மாற்ற வேண்டாமென, சிங்கள ராவய அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் சவாலை வெற்றிக் கொள்வதற்காக தேவையான ஒத்துழைப்பை வழங்க நாட்டு மக்களைப் போல் தாமும் ஜனாதிபதியுடன் இருப்பதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...