’இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு..’ மனு தாக்கல்!

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு உயர் நீதிமன்றத்தில் விஷேட மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் 17 பேரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதன் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 122 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தங்களுடைய பதவியில் கடமையாற்ற விடாது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தர அரசியலமைப்பிற்கு விரோதமானது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு தீர்ப்பை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...