மைத்திரிக்கு நன்றி தெரிவிக்கும் ரஞ்சன் ராமநாயக்க !

ஐக்கிய தேசிய கட்சிக்குள் காணப்பட்ட கருத்து முரண்பாடுகள் மற்றும் ஏனைய பல்வேறு சிக்கல்களை தீர்த்து தற்போது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதவியுள்ளார்.
அவருடைய சில செயற்பாடுகளால் ஐக்கிய தேசிய கட்சிக்கு தனித்து அரசாங்கமொன்றை அமைத்து ஆட்சி செய்யக் கூடிய சூழல் உருவாகியுள்ளது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்து வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைக்கு முரணானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை நிறைவடைந்ததன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

ஜனாதிபதியால் கூறப்படும் எந்த விடயத்தை நாம் நம்புவது என அவரிடமே கேட்க விரும்புகின்றேன். காரணம் அண்மைக்காலமாக அவர் தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கேட்டால், அவற்றை நான் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக கூறினேன் எனக் கூறுவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...