மகிந்த அரசுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு வருகிறது !பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமை பேராண்மை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவே, ஒரு நீதிப்பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே மேற்படி யாதுரிமை பேராண்மை மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...