தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம் : தேர்தல் அவசியம்- நாமல்

நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம் என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எங்களிற்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளபோதிலும் நாங்கள் தீர்ப்பை மதிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் அவசியம் என குரல்கொடுப்பவர்களின் பக்கமே நாங்கள் தொடர்ந்து நிற்போம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச பாராளுமன்ற தேர்தல் இல்லாமல் மக்களிற்கு உண்மையான நீதி கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...