அரசியலமைப்பினை மீறிய தேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் ; சஜித் பிரேமதாச !

அரசியலமைப்பினை மீறிய தேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும். என குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, நாட்டின் எதிர்காலம், ஜனநாயகம், பிள்ளைகளின் எதிகாலம் என சகல துறைகளையும் பாதுகாப்பதற்காக அரசியல் சதிகாரர்களுக்கான எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டு மக்கள் அனைவரும் அணித்திரள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் யாப்புக்கு முரணான செயற்பாட்டினை எதிர்த்து 'நீதிக்கான போராட்டம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி மக்களை அணித்திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையிலேயே இன்று அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி சட்டத்திட்டங்களுக்கமைய நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேவை எழுந்துள்ளது. அரசியல் அமைப்பினை மறந்து தனது தனிப்பட்ட எண்ணத்தை நாட்டில் நிலைநாட்ட துணிந்தவர்களுக்கு மக்களின் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...