முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் அனாதையாகியுள்ளார் !

பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் கேட்டதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்றை செய்ய உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கூறுவது போல் தற்போதைய அரசியல் சிக்கலிற்கு காரணம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விலை நியமிக்கப்பட்டதாக இருப்பின் அது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலமையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் அனாதையாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...