சத்தியாக்கிரகப்போராட்டம் நிறைவு!

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து நடத்திய சத்தியாக்கிரக போராட்டம் நிறைவடைந்துள்ளது. 

´ஜனநாயகத்தை பாதுகாப்போம்´ என்ற தொனிப் பொருளில் சுமார் 50 நாட்களாக இந்த சத்தியாக்கிரக போராட்டம் கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் இடம்பெற்று வந்தது.

பாராளுமன்றத்தை கலைக்க தீர்மானித்ததானது, அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து இந்த சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டதாக சிவில் அமைப்புக்கள் கூறியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...