இன்றைய தினம் இடம்பெறவுள்ள மிக முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் நேற்றிரவு 7.00 மணிக்கு இடம்பெறவிருந்த சந்திப்பு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த சந்திப்பு இன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இன்று தம்முடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் உதய கம்மன்பில, மிகவும் தனிப்பட்ட முறையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை வெளிப்படுத்துவது உகந்ததல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள மிக முக்கிய சந்திப்பு! இன்றைய தினம் இடம்பெறவுள்ள மிக முக்கிய சந்திப்பு! Reviewed by Ceylon Muslim on December 03, 2018 Rating: 5