இடைக்கால தடையுத்தரவை எதிர்த்து மகிந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்தார்

மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மேன்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

நாட்டின் அரசியல் சட்ட விவகாரங்களில் உச்ச நீதிமன்றமே இறுதித் தீர்ப்பளிக்க முடியும் என்பதால் மேன்முறையீட்டு நீதிமன்றின் தடையுத்தரவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவித்தே மஹிந்த இவ்வாறு உச்ச நீதிமன்றை நாடியுள்ளார்.


எனினும், இவ்வழக்கின் தீர்ப்பு வரும் வரை இடைக்காலத் தடை அமுலில் இருக்கும் என சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...