இறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்!


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் நிதியை தவறான பயன்படுத்தியமையினால் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. குறித்த மனு விசாரணை நிறைவடையும் வரை ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதனை தடுப்பதற்கு உத்தரவு விடுக்குமாறு கோரிக்கை விடுப்பற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமகாலத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய மனு இரண்டின் மீது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்! இறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்! Reviewed by NEWS on December 11, 2018 Rating: 5