O/Lயில் ஆள் மாறாட்டம் செய்த 03 வர் கைது! (கல்முனை, தனமல், திககொட)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  குறித்த 3 பேரும் கல்முனை, திககொட மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். 


கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் நேற்று நடைபெற்ற கணிதப் பாட பரீட்சைக்காக, உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறு நபர்கள் தோற்றியுள்ளனர். 



சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர். டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைகள், நாளையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...