தேசிய தொலைக்காட்சி அலுவலக பகுதியில் பதற்ற நிலைமை - STF குவிப்பு

தேசிய தொலைக்காட்சி அலுவலக பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் தேசிய தொலைக்காட்சி சேவைக்குள் நுழைய முற்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ம் திகதி ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்ற அன்று, இரவு வேளையில் தேசிய தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தது. அங்கிருந்த ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் அமைச்சுகளின் பொறுப்புகளை ஏற்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார். கடந்த ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் மங்கள சமரவீர ஊடக அமைச்சராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...