நிந்தவூருக்கு 115 வீடுகள்

வறிய மக்களின் நலன் கருதி சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக நிந்தவூரில் 115 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா சனிக் கிழமை [12.01.2019] பைசல் காஸிமின் தலைமையில் அங்கு இடம்பெறவுள்ளது.
 
ஐந்து வலயங்களில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வலயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.மீரா நகர் வலயம்-20 வீடுகள்,வன்னியர் வலயம்-20 வீடுகள்,மாந்தோட்டம் வலயம்-24 வீடுகள்,புது நகர் வலயம்-16 வீடுகள் மற்றும் தலைவர் வீடமைப்பு வலயம்-35 வீடுகள்.


மேலும்,பூரணப்படுத்த நிதி வசதி இன்றி பகுதியளவில் இருக்கும் 25 வீடுகளையும் முழுமைப்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத் திட்டமும் இதனுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ளது.


மேற்படி வீட்டுத் திட்டம் ஒரு பரிச்சாத்த நடவடிக்கையாகும்.இதனைத் தொடர்ந்து மேலும் பல வீட்டுத் திட்டங்கள் பல்வேறு ஊர்களில் முன்னெடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...