ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க சவூதி இணக்கம் : ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி

இலங்கைக்கு இதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல விண்ணப்பித்திருந்தும் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையை கருத்திற்கொண்டு இரண்டு வார காலமே முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் பொறுப்பேற்றவுடன் உடனடியாக சௌதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலிதுடனும் முஸ்லிம் சமய கலாசார ஆலோசகர் ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமி செயலாளர் கலாநிதி ஈஸாயி , சௌதி இளவரசர் "முக்ரின்" உட்பட பல தரப்பினர்களோடு பேசி 2500 கோட்டாவை, ஆக குறைந்தது 1000 ஆக அதிகரித்து 3500 தர வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். 

இதனை பரீசிலித்த சௌதி அரசு இலங்கையின் ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பான இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் சௌதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்து உத்தியோகபூர்வமாக முன்னாள் அமைச்சர் ஆளுநர் MLAM ஹிஸ்புழ்ழாஹ்விற்கு தெரிவித்தார். 

இது தொடர்பாக ஆளுனரிடம் வினவிய போது இரண்டு வாரம் காலம் இந்த அமைச்சை பொறுப்பேற்று 1000 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற எனது முயற்சி வெற்றியளித்துள்ளது. நம் பெருமையடைகிறேன் ,அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன் என ஆளுநர் தெரிவித்தார்.

ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க சவூதி இணக்கம் : ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க சவூதி இணக்கம் : ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி Reviewed by NEWS on January 23, 2019 Rating: 5