
2019ஆம் ஆண்டு முடிவுக்குள், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையிலான புதிய கூட்டணியில் இருந்து அதிபர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் சில மாவட்டங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகளை விட, சிறிலங்கா பொதுஜன முன்னணி அதிக பலத்தை நிரூபித்திருக்கிறது, என்றும், எதிர்காலத் தேர்தல்களில் அதனை விடப் பெரிய பலத்தைப் பெறும் என்றும் பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார்.
தற்போது தமது கட்சியின் இலக்கு ரணில் விக்கிரசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ அல்லது நவீன் திசநாயக்கவோ அல்ல என்றும், அனைத்துலக சூழ்ச்சிக்காரர்களையே தாம் இலக்கு வைப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் அடுத்த அதிபர் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பார்!
Reviewed by Ceylon Muslim
on
January 14, 2019
Rating:
