சுரக்ஷா காப்புறுதித் திட்டத்திற்கு மீண்டும் அமைச்சரவை அனுமதி !

சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை 2019ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

கடந்த வருட அனுபவங்களைக் கருத்திற்கொண்டு மாணவர்களுக்கு கூடுதலான பயன் கிடைக்கும் வகையில் புதிய யோசனைகளை உள்ளடக்குவதற்கு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமின் வழிகாட்டலின் கீழ் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இந்த வருடத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் இரண்டு லட்சம் ரூபாவும் அரச வைத்தியசாலையில் அல்லது அரச ஆயுர்வேத வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பட்சத்தில் நாளாந்தம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வெளிவாரியான சிகிச்சைகளின்போது 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும்.

பெற்றோர் அல்லது பாதுகாவலர் மரணிக்கும் பட்சத்தில் ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபாவும் மாணவர் உயிரிழக்கும் பட்சத்தில் ஈமக்கிரியைகளுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் முழுமையாக அல்லது நீண்டகால இயலாமைக்கு உட்படும்போது வருடாந்தம் 50 ஆயிரம் ரூபா முதல் 2 லட்சம் ரூபா வரையும்பெற்றுக்கொள்ள முடியும்.

கொடிய நோய் ஏற்படும் பட்சத்தில் இரண்டு லட்சம் ரூபா பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அரச தகவல் திணைக்களம்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்