திருச்சி மணிச்சடர் ஊடகவியலாளர் ஷாகுல் ஹமீது கௌரவிப்புதேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 2019ம் வருடத்திற்கான முதலாவது விசேட கூட்டமும், கௌரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது வுளு சேன்ட் ஹோட்டலில் இடம்பெற்றது

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) தவிசாளர் றியாத் ஏ. மஜீத் நெறிப்படுத்தலில் ஒன்றியத்தின் ( நுஜா) தலைவரும்,சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாககல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் கலந்து கொண்டார்.இவ்விசேட கூட்டத்தில் ஒன்றியத்தின் சமகால முன்னடுப்புக்கள் மற்றும் 2019ம் ஆண்டுக்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன்

மேலும் இவ் ஒன்றுகூடலில் விசேட அம்சமாக இந்தியாவின் திருச்சி நகரைச் சேர்ந்த மணிச்சடர் நாளிதழின் ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீதுக்கு அமைப்பினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

தமிழகத்திலிருந்து வெளிவரும் 'மணிச்சுடர்' நாளிதழின் பிரதம செய்தியாளரான சாகுல் ஹமீத் இந்திய இலங்கை ஊடகவியலாளர்களுடன் நட்புறவைக் கட்டியெழுப்புவதில் முன்னின்று செயல்பட்டவராவார்.மேலும் இவர் தமிழகத்தின் திருச்சியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும் இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் செயலாளரும், பிரதித் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா, உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...