முக்கியஸ்தர்கள் கொலை சதி : விசாரணையை மறுத்த முக்கியஸ்தர்கள்

பொலிஸ் உளவாளி நாமல் குமாரவினால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய சந்தேகத்தில் முன்னாள் டி.ஐ.ஜி நாலக சில்வா சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த விவகாரத்தில் தொடர்புபட்டதாகக் கருதப்படும் இந்திய பிரஜையொருவர் தொடர்பிலான விசாரணைகளும் தொடர்வதாக தெரிவிக்கின்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இந்நபருடனான தொடர்பு பற்றி விசாரிப்பதற்கு நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி சசி வீரவன்ச ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் ஆஜராக மறுத்து வருவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்..

சந்தேகத்துக்குரிய குறித்த இந்திய பிரஜை விமல் வீரவன்சவின் வீட்டுக்குச் சென்று சசி வீரவன்சவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாக கூறப்படுகின்றமையும் இதே நபர், நாமலை சந்திக்கவும் அவரது வீடு தேடிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முக்கியஸ்தர்கள் கொலை சதி : விசாரணையை மறுத்த முக்கியஸ்தர்கள் முக்கியஸ்தர்கள் கொலை சதி : விசாரணையை மறுத்த முக்கியஸ்தர்கள் Reviewed by Ceylon Muslim on January 21, 2019 Rating: 5