வீதி விவகாரம் : புத்தளம் பிரதேச சபையின் உப தவிசாளர் கைதுபுத்தளம் பிரதேச சபையின் உப தவிசாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புத்தளம் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியொன்றில் வெட்டப்பட்ட குழியொன்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீதியை புனரமைக்கும் பணியானது மேற்படி உப தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டபோது, வீதி புனர‍மைக்கும்போது அது தொடர்பான முன் எச்சரிக்கை அறிவித்தல் பதாதை காட்சிப் படுத்தப்படாதமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் பிரதேச சபையின் உப தவிசாளரான ஜயம்பதி மதுராஜ் என்பவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...