முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை!

 
 
முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அவருக்கு எதிரான வழக்கொன்றில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சராக இருந்த போது தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன் காரணமாக குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2010 முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன் காரணமாக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருப்பதாக கூறி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...