எதிர்வரும் 5ஆம்  பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படவுள்ளதால், அன்றைய தினம் திகதி நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்
2300 வருடங்களாக பௌத்த பிக்குகள் உள்ளடங்களாக இலங்கையின் பௌத்த மக்களால் போற்றி பாதுகாக்கப்படும் பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கும் தேசிய வைபவம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி மாத்தளை அலுவிஹாரையில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  நடைபெறவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார்.

Share The News

Ceylon Muslim

Post A Comment: