ரணில்? சஜித்? கரு ? யார் என பிறகு அறிவிப்போம் - அமைச்சர் நலின் பண்டார


நாட்டில் முதலில் நடக்கப் போவது எந்தத் தேர்தல் என்பதைப் பொருத்துத்தான் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரைத் தீர்மானிக்கவுள்ளோம் என பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்தார்.

நேற்று (21) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் யார் ? என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில்? சஜித்? கரு ? ஆகிய மூவரில் யார் தீர்மானிக்கப்படும் என வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...