கிழக்கு மாகாண ஆளுனர் கெளரவ கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களை இன்று கொழும்பில் சந்தித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனராக செயற்படுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும்,கிழக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்குமாறும் கேட்டக்கொண்டார்.

தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்கள்,துயரங்களை தாங்கி நிற்கிறார்கள். அவர்களுக்கு எவ் விதமான அநியாயம் நடந்துவிடக்கூடாது , கடந்த காலங்களில் நியமனங்கள்,பாடசாலை போன்ற விடயத்தில் அநியாயங்கள் மாகாண நிருவாகத்தில் இடம் பெற்றிருக்கிறது. 

தமிழ் மக்கள் யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அந்த மக்கள் எந்தவொரு அரசாங்கத்தோடும் இனைந்து அமைச்சர்களை பெறாமல் இன்று வரையும் தங்களுடைய உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள் . இவ்வாறான சூழ்நிலைகளில் நீங்களும் ஆளுனராக நியமிக்கபட்டுள்ளீர்கள் நீங்கள் தமிழ் பேசும் ஒருவர் நேற்று ஆளுனர் செயலகத்தில் சகல இன மக்களையும் சந்தித்து பிரச்சனைகளை அறிந்ததில் நான் மிகவும் சந்தோசம் அடைந்தேன்.

எனவே தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளை தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைகள் , அடிப்படை பிரச்சனை ,சுகாதாரப்பிரச்சனை கல்வி தெடர்பான பிரச்சனை , நிர்வாக பிரச்சனை போன்றவற்றில் அதிகளவு அக்கறை செலுத்தி அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மேலும் ஆளுனர் ஹிஸ்புழ்ழாஹ் அவர் மிகவும் நீதியாகவும், நேர்மையாகவும் எந்தவொரு இனத்திற்கும் பாதிப்பு ஏற்பாடதவகையில் தனது நடவடிக்கைகளை முன்னேடுப்பதாக ஆளுனர் பதிலளித்தார்.

Share The News

Ceylon Muslim

Post A Comment: