பாலர் பாடசாலைகளுக்கு நீர் வடிகட்டும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கொழும்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலர் பாடசாலைகளுக்கு நீர் வடிகட்டும் உபகரணங்கள் (Water Filter)  வழங்கும் நிகழ்வு இன்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

முஜீபுர் றஹ்மான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம்  (3,50,000.00)  ரூபாய்  பெறுமதியான நீர் வடிகட்டும் உபகரணங்கள்  கொழும்பிலுள்ள 58 பாலர் பாடசாலைகளுக்கு   வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான், நவம்புர விகாராதிபதி கிலோகம இந்திரவன்ச ஹிமி, கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் ஏ.ரி.எம். இக்பால், மாநகர சபை உறுப்பினர்கள் ஏ.ஆர்.எம்.  சபான், ஷமீர் சஹாப்தீன், திலின பிரசாத் , முன்னாள் நகர சபை அங்கத்தவர் றிபாய் பஹாவுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் அவர்களின் பாராளுமன்ற ஆய்வதிகாரி ஏ.டப்லியூ.ஏ அஸீஸ், திட்டமிடல் அதிகாரி அஜித் ஸ்ரீ பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...