தேர்தல் நடைபெறாவிட்டால் பதவி விலகுவேன் - தேர்தல் ஆணையாளர்

மாகாண சபை தேர்தல்கள் எதிர்வரும் நவம்பர் 10ம் திகதிக்கு முன்னர் நடைபெறாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் பதவி விலகுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்கள் இரண்டு வருட காலமாக பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...