ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்திற்கு சாந்த பண்டார !

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு நியமிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதை அடுத்து அப்பதவிக்கு நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்காக சாந்த பண்டார நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்