கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் பார்வையிட்ட ஹரீஸ்

கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (28) திங்கட்கிழமை அனுராதபுர சிறைச்சாலைக்கு சென்று சந்தித்ததோடு அனுராதபுரத்திலுள்ள தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளையும் சந்தித்து குறித்த மாணவர்களின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடினார்.

அத்தோடு அங்கு வருகை தந்திருந்த குறித்த மாணவர்களின் பெற்றோருடனும் உரையாடினார்.

இதன்போது சட்டத்தரணி ஹபீப் றிபான் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நெளபர் ஏ. பாவா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...