மாவனெல்லை, புத்தள சம்பவம் : முஸ்லிம் சமூகம் கவனத்திற்கொள்க : தேரர்

அண்மையில் இடம்பெற்ற மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பங்கள் மற்றும் புத்தளம் வணாத்தவில்லு பகுதியில் பொலிஸாரால்ல் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் அதிக அக்கறை கொள்ள வேண்டும். இசம்பவங்களின் பின்னணியில் சர்வதேச அமைப்புக்களின் தொடர்புகள் உள்ளனவா என்பதை ஆராய்ய வேண்டும் என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரகாகொட ஞானரத்ன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நேற்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று பீடாதிபதிகளை சந்தித்த போதே தேரர் இந்த கோரிக்கையை ஆளுநரிடம் விடுத்துள்ளார். 

தேரர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்; 

“நடைபெற்றுள்ள சம்பவங்கள் மிகவும் பாரதூரமானதாகும். இச் சம்பவங்களின் பின்னணியை கண்டறிந்து அவற்றை ஆரம்பித்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.” அதற்காக அசாத் சாலி பதிலளிக்கையில் திங்கட்கிழமை நான் முஸ்லிம் தலைவர்களையும், பாதுகாப்பு செயலாளரை சந்தித்து கலந்துரையாடல் செய்யவுள்ளேன். அதன் பின்னர் பின்னணி தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார். 
மாவனெல்லை, புத்தள சம்பவம் : முஸ்லிம் சமூகம் கவனத்திற்கொள்க : தேரர் மாவனெல்லை, புத்தள சம்பவம் : முஸ்லிம் சமூகம் கவனத்திற்கொள்க : தேரர் Reviewed by Ceylon Muslim on January 21, 2019 Rating: 5