ஒலுவில்: முஸ்லிம்களின் காணிக்கு அதிரடி தீர்வு எடுத்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

அட்டாளைச்சேனை ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லீம்களுடைய 38 ஏக்கர் காணிகளை 30 வருடமாக இராணுவம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

அந்த காணிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடனடியாக அந்த காணிகளை உத்தியோகபூர்வமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அம்பாறை கச்சேரியில் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களிடத்தில் கையளிக்கப்படவுள்ளது

இதே வேளை முன்னாள் ஆளுநர் இந்த காணிகளை வன இலாகாவுக்கு ஒப்படைக்கும்படி எழுத்து மூலமாக உத்தரவு பிறப்பித்திருந்தார் .

மேலும் இந்த காணிகள் முஸ்லீம்களின் பூர்வீக காணி முப்பது வருடங்களுக்கு முன்பு 69 குடும்பங்கள் இந்த காணிகளில் வாழ்ந்துள்ளார்கள் அதற்கான சகல ஆவணங்களும் உள்ளதாக அந்த மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

இன்று காலை இது தொடர்பாக அந்த பிரதேச அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து உடனடியாக ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அதனை நிறுத்தி எக்காரணம் கொண்டும் வன இலாகாவிற்கு இந்த காணிகள் வழங்கபடமாட்டாது என்றும் அந்த பிரதேச அரசியல் தலமைகளோடு பேசி காணி தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என கூறிப்பிட்டார்.

மேலும் , ஆளுநர் உடனடியாக மாகாண காணி ஆனையாளரினுடாக அரசாங்க அதிபருக்கு அறிவிக்கபட்டுள்ளதுடன், இரண்டு வாரத்திற்குள் ஆளுநர் நேரடியாக அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து சம்பந்தப்பட்ட அரசியல் தலமைகளுடன் கலந்துரையாடி இறுதியான தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...