முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு உத்தியோகபூர்வ சீருடைகள்

முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு உத்தியோகபூர்வ சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.

சில முச்சக்கர வண்டிச் சாரதிகள், நாகரிகமான முறையில், தமது உடைகளை அணிந்து பயணிப்பதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகளில், தமக்கான சீருடையொன்றை வழங்குமாறு, முச்சக்கர வண்டிச் சாரதிகளால் கோரிக்கை விடப்பட்டிருந்ததாகவும், தேசிய வீதிப் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைத் திட்டத்துக்கு, சில முச்சக்கர வண்டிச் சாரதிகள் தமது எதிர்ப்பை வௌியிட்டு வருவதாகவும் தெரியவருகிறது.(அ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்