தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

மாணவர்களுக்கு பிணை இல்லை - இன்றைய வழக்கு விசாரனை

பௌத்த தூபிக்கு மேல் நின்று, புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டு அநுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தென் கிழக்கு பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 7 முஸ்லிம் மாணவர்களையும் விடுவிக்க இன்று 29, செவ்வாய்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் 7 மாணவர்களையும் விடுவிக்க, நீதிபதி மறுப்புத் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களை பிணையில் விடுவிக்க பொலிசார் இணங்கினர். எனினும் அதற்கு நீதிபதி மறுப்புத் தெரிவிததுள்ளார்.

இருந்தபோதும் முறைப்பாட்டை வாப வாபஸ்பெற. பொலிசார் அடியோடு மறுத்துள்ளனர்.சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள், இந்த வாதப்பிரதி வாதங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது.

7 மாணவர்கள் சார்பிலும் வாதாடிய சட்டத்தரணிகளிடம், மாணவர்களை விடுவிப்பதற்கான ஏதுநிலைகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் எதிர்வரும் 5 ஆம் திகதி இதுதொடர்பில் மேற்கொண்டு ஆராய்ந்து பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்னாமுஸ்லிம் 

Post Top Ad

Your Ad Spot

Pages