தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jan 23, 2019

”மாவனல்லையில் கலவரத்திற்கு முயற்சி ”

மாவனல்லை மற்றும் புத்தளம் பகுதியில் ஆயுதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை காரணமாக வைத்துக்கொண்டு பெளத்த காவி வாதிகள் சிலரும் அவர்களுடன் இணைந்த அமைப்பினர் சிலரும் மாவனல்லை பிரதேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரச தரப்பினர் இன்று சபையில் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனினும் இந்த நாட்டினை தீ வைக்கும் நோக்கத்தில் அரசியல் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது எனவும் அரச தரப்பினர் சபையில் சுட்டிக்காட்டினர். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி அண்மையில் மாவனல்ல மற்றும் புத்தல் பகுதியில் ஆயுத மீட்பு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார், 

அதன்போது :- அண்மையில் மாவனல்லை சிலை உடைப்பு சம்பவம் குறித்து அப் பகுதியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் தந்தையர்களின் வீடுகளில் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் ஏனைய சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் புத்தளம் பகுதியில் ஒரு காணியில் பெருமளவிலான ஆயுதங்கள் கண்டறியப்பட்டது. இந்த செயற்பாடுகள் சில சர்வதேச நாடுகளின், சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் இந்த நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கபடுகின்றமை இதன் மூலமாக தெரிகின்றது. இது மிகவும் மோசமான செயற்பாடாகும். இந்த சம்பவங்கள் குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணை தகவல்களை சபைக்கு அறியத்தர வேண்டும். இந்த நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் அமைதியாக இந்த நாட்டில் வாழ விரும்புகின்றனர். அவ்வாறு இருக்கையில் இவ்வாறான செயற்பாடுகள் அவர்களையே பாதிக்கும் வகையில் அமையும், ஆகவே அரசாங்கம் இது குறித்து எமக்கு அறியத்தர வேண்டும் என கேள்வி எழுப்பினார். 

இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல:- முறையான விசாரணைகளை முன்னெடுத்த காரணத்தினால் தான் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளது. விமல் வீரவன்சவின் கேள்வியிலேயே எமது விசாரணை சரியாக இடம்பெற்று வருகின்றது என்பது உறுதியாகியுள்ளது எனக் குறிப்பிட்டார். 

Post Top Ad

Your Ad Spot

Pages