ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க !

ஐக்கிய தேசிய கட்சியை மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. 

ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள் சபையை எதிர்வரும் ஆண்டுக்கும் தெரிவு செய்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அடுத்து வரும் ஆண்டுக்கான அந்த கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேவேளை நேற்றைய கூட்டத்தின் போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...