போதைப்பொருள் தொடர்புள்ளவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம் : ஜனாதிபதி

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடந்த நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான திட்டமிட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற துரித தொலைபேசி இலக்கமொன்றும் இதன்போது ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கமைய 1984 என்ற இலக்கத்தினூடாக இந்த தகவல்களை வழங்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்