சக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு

சக்தி, சிரச, எம் டி வி வலையமைப்பின் முகத்திரியைக் கிழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் சபீயுல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையி ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் சிண்டு முடிந்து பிரச்சினைகளை உருவாக்கி இன நல்லுறவை சீர்குலைக்கும் இந்த செய்தி நிறுவனம் தனது விளம்பரத்துக்காக தொடர்ந்தும் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றது.

அந்த வகையில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாக அகதி முகாமில் வாழ்ந்த மக்கள் மீளக்குடியேறச் சென்ற போது அவர்கள் வில்பத்துக் காட்டையும் பெரிய மடுக்காட்டையும் அழிக்கின்றார்கள் என்று வேண்டுமென்ற பிரச்சாராங்களை முடுக்கிவிட்டது.

அது மாத்திரமின்றி அடிக்கடி உலங்கு வானூர்தியில் கூலிக்கு மாறடிக்கும் ஊடகவியலாளர்களை ஏற்றிக்கொண்டும், ட்ரோன் கெமராக்கள் மூலமும் படங்களை பிடித்தி அதனை திரிபு படுத்தி ஒளிபரப்பியதுடன் சிங்கள மக்கள் மத்தியிலே முஸ்லிம்கள் மத்தியிலே தவறான எண்ணத்தை பரப்பியதை இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் நினைவூட்ட விரும்புகின்றோம்.

தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடுவதையும், தமிழர்களையும் சிங்களவர்களையும் மோதவிடுவதையும், சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடுவதையும் குலத்தொழிலாகக் கோண்ட இந்த ஊடகம், ஊடகத் தர்மமும் சரளமாகக் கதைக்கும் தகுதியும் இல்லாத அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களையும் கொழுத்த சம்பளத்தில் வேலைக்கமர்த்தி இந்த கைங்கரியத்தை செய்து வருவதை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர்.

சுமந்திரன் எம் பி இவ்வாறான ஊடக நிறுவனங்களை இப்போதாவது இனங்கண்டு மூக்குடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

சக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு சக்தி, சிரசவின் திருவிளையாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன் எம்பிக்கு முஸ்லிம் வெகுஜன ஊடக அமைப்பு பாராட்டு Reviewed by Ceylon Muslim on January 17, 2019 Rating: 5