மாகாணசபை திருத்த சட்டத்தில் விட்ட தவறை அரசியலமைப்பில் விடக்கூடாது

முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத் திருத்தத்தில் கோட்டைவிட்டது போல அரசியலமைப்பிலும் கோட்டை விட்டுவிடக்கூடாது எனஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷகுறிப்பிட்டுள்ளார்.
நாவலப்பிட்டி நகரில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேதலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டஅவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போது அவசர அவசரமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவரப்படசுமந்திரன் குழு முயற்சித்து வருகிறது. புதிய அரசியலமைப்பில் ஒற்றையாற்சிநாடாகவே இலங்கை இருக்கும் என பிரதமர் தரப்பு சிங்கள மொழியில் கூறிவந்தாலும் அதற்கு மாற்றமான ஒரு கருத்தினை சுமந்திரன் கூறிவருகிறார்.

அவசரமாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பு தொடர்பில் நாட்டு மக்கள் பீதிஅடைந்துள்ளனர். பெரும்பான்மை மக்களின் பூரண விருப்பத்துடனேயேசிறுபான்மை மக்களுக்கு அதைகாரம் பங்கீடு செய்யப்பட வேண்டும். குறுக்குவழிகளில் அதிகார பகிர்வை செய்தால் அது ஒருபோதும் நிரந்தர சமாதானத்தைஏற்படுத்தாது.

தமிழ் கூட்டமைப்பு அரசியலமைப்பை எவ்வாறாவது நிறைவேற்றிக்கொள்ளவேண்டும் என்ற விடாப்பிடியாக உள்ளது. இந்த விடயத்தில் முஸ்லிம் கட்சிதலைவர்கள் மிகவும் கரிசனை எடுத்துக்கொள்ளவேண்டும்.
மாகாண சபை திருத்த சட்டத்தில் விட்ட தவறை அரசியலமைப்பில் விடக்கூடாது என குறிப்பிட்டார்.
-ஊடகப்பிரிவு -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்