முஸம்மில் CIDயில் ஆஜர் !

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதித்திட்டம் ​ தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று (28) தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, அவரின் மனைவி சசி வீரவங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியவர்களிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...