வெடிபொருள் சம்பவம் : கொழும்பு MP ஒருவர் மூடி மறைக்க முயற்சி

புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கைப்பற்றப்பட்ட வெடி­பொருள் விவ­கா­ரத்­தினை கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் மூடி­ம­றைக்க முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றார். அவர் யார் என்­பதை வெகு விரைவில் அம்­ப­லப்­ப­டுத்­துவேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பியல் நிஷாந்த டி சில்வா தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­முன தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் இன்று தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான நிகழ்­வுகள் மாத்­தி­ரமே இடம் பெறு­கின்­றன. விடு­தலைப் புலிகள் காலத்தில் வடக்கு, கிழக்கில் மாத்­தி­ரமே மக்கள் அச்­சத்­துடன் வாழ்ந்­தனர். ஆனால் இன்று நாட்டில் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் வன்­முறை சம்­ப­வங்கள் பகி­ரங்­க­மாக இடம்­பெ­று­கின்­றன. பாதாள உலகக் குழு­வி­ன­ரது மோதல்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றன. புத்­தளம், வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கைப்­பற்­றப்­பட்­டுள்ள வெடி­பொ­ருட்கள் தொடர்பில் அர­சாங்கம் மந்­த­க­ர­மான முறை­யிலே செயற்­ப­டு­கின்­றது.

வெடி­பொருள் விவ­கா­ரத்தின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீ­டுகள் நிச்­சயம் காணப்­படும் என்ற சந்­தேகம் தற்­போது எழுந்­துள்­ளது. இவ்­வி­ட­யத்தை மூடி­ம­றைக்க கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றார். அவர் யார் என்­பதை வெகு­வி­ரைவில் பகி­ரங்­கப்­ப­டுத்­துவோம்.

கடந்த காலங்­களில் நாட்டில் இடம்­பெற்ற இனக் கல­வ­ரங்­களின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களின் செல்­வாக்கு காணப்­பட்­டது.

பேரு­வளை பிர­தே­சத்தில் இடம்பெற்ற இனக்­க­லவ­ரத்­திற்கு மூல­கா­ரணம் யார் என்­பதை நாங்கள் பாரா­ளு­மன்­றத்­திலும், பொது இடங்­க­ளிலும் பகி­ரங்­கப்­ப­டுத்­தினோம். ஆனால் அர­சாங்கம் அவ்­வி­டயம் தொடர்பில் எவ்­வித முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­களும் எ­டுக்­க­வில்லை. இது­ரையில் வன்­முறை சம்­ப­வத்­திற்கு யார் காரணம் என்ற விடயம் முழு­மை­யாக அர­சாங்­கத்­தி­னாலே மூடி மறைக்­கப்­பட்­டு­விட்­டது. இக்­க­ல­வரத்தில் பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­க­ளுக்கு எவ்­வி­த­மான நியா­யமும் கிடைக்­க­வில்லை.

தற்­போது நாட்டில் இடம்­பெ­று­கின்ற ஒவ்­வொரு சம்­ப­வமும் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் விடுப்­ப­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. பாதாள உலகக் குழுவினரது மோதல்கள் சாதாரணமாகவே இடம் பெறுகின்றன. இவ்விடயத்தில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் மீட்பு இவ்விடயங்களுக்கு விரைவில் தீர்வு காணாவிடின் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்