தேசிய அரசாங்க யோசனை 07ம் திகதி பாராளுமன்றத்துக்கு!

தேசிய அரசாங்க யோசனை 07ம் திகதி பாராளுமன்றத்துக்கு

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமான யோசனையை எதிர்வரும் 07ம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்பித்து அனுமது பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக பாராளுமன்ற அவைத்தலைவரும், அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். 

இது சம்பந்தமான யோசனை நேற்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

ஐக்கிய தேசிய கட்சியினால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனை பாராளுமன்ற செயலாளருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 48 இற்கு அதிகரிக்காமலும், அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கை 45 இற்கு அதிகரிக்காமலும் இருக்குமாறு தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்ககொள்ள உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருப்பதால் தேசிய அரசாங்கம் அமைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இந்த யோசனை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டு எதிர்வரும் 07ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...