2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 5ம் திகதி

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 5ம் திகதி இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மார்ச் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறும்.

மார்ச் 13ஆம் திகதி முதல் ஏப்ரல் 5ஆம் திகதி வரை வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் இடம்பெறும். தொடர்ந்தும் அன்றைய தினம் வரவு செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...