2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பம்


2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் கூறியுள்ளார். 

பாடசாலை விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னரும், தனியார் பரீட்சார்த்திகள் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சை திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

இந்த முறை பரீட்சைகள் புதிய மற்றும் பழைய முறைப்படி இடம்பெறவுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விரைவாக அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பம் 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பம் Reviewed by Ceylon Muslim on February 15, 2019 Rating: 5